வியாழன், 7 மார்ச், 2013

சிகிரியா



இலங்கைத் திருநாட்டில் இணையற்ற கலைப் பாரம்பரியத்துடன் கூடிய புராதன இடங்களில் ஒன்றாக சிகிரியா விளங்குகிறது.முதலாம் காசியப்ப மன்னனால் (47795) உருவாக்கப்பட்ட சிகிரியா நகரின் எச்சங்கள் செங்குத்தான பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. சுமார் 370 மீற்றர் உயரக் குன்றில் (சிங்கக் குன்று) இருந்து எல்லா பக்கத்திலும் உள்ள காடுகளைப் பார்க்க முடியும். இலங்கையின் கட்டிடக் கலை மரபு சிகிரியாவில் மிக அழகாக தோன்றுகிறது. ஆசியாவில் மிகச் சிறப்பாக பேணப்படும் நகராக இந்நகரம் கட்டிடங்கள், நந்தவனங்கள், பாறைகள், நீர்த்தோட்டங்கள் மற்றும் இயற்கை செயற்கைத் திட்ட அமைப்பின் எழிலோடு விளங்குகின்றது. இன்றும் அதன் பழைய அமைப்பின் கம்பீர அழகைக் காட்டுவதாக உள்ளது.



சிகிரியாக் குன்று சிற்பங்கள் 6ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. இக்கோட்டையை காசியப்பன் எதிரிகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைத்தான் என வரலாறு கூறுகிறது.



துலங்காத மர்மங்கள்



லௌவீகம், ஆத்மீகம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சிகிரியா ஓவியங்கள், மன்னன் காசியப்பன் அனுராதபுரத்திலிருந்து சிகிரியாக் குன்றை ஏன் தெரிவு செய்தான்? ஓவியங்களில் உள்ள பெண்கள் யார்? என்பன போன்ற மர்மங்கள் சிகிரியா அமைக்கப்பட்டு 1500 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், துலங்காமல் தொடர்கின்றன.



யார் இந்தப் பெண்கள்?



சிகிரியா ஓவியங்கள் சித்தரிக்கும் பெண்கள் புத்தரைத் தரிசிக்கச் செல்லும் மகளிர் என வரலாற்றாசிரியர்களால் நம்பப்படுகிறது. அவர்கள் கைகளில் ஏந்தியிருக்கும் அல்லி மலர்கள், முகத்தில் வெளிப்படும் பக்தி உணர்வு ஆகியவற்றை சில வரலாற்றாசிரியர்கள் இதற்குச் சான்றுகளாக முன்வைக்கின்றார்கள். இந்தப் பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து மகளிர் என்றும் கருதுகின்றனர் சில வரலாற்றாசிரியர்கள். யார் இந்தப் பெண்கள் என்ற வினாவுக்கு விளக்கம் இதுவரை எந்த வரலாற்றாசிரியராலும் முழுமையாக முன்வைக்கப்படவில்லை. துர்க்குணங்கள் நிறையப் பெற்ற காசியப்ப மன்னனின் அரண்மனையில் பெண்கள் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் எனவும் நம்பப்படுகிறது. எதுவாக இருந்தபோதிலும் பெண்களின் இடையமைப்பு, முக அமைப்பு என்பன அஜந்தா ஓவியம் மற்றும் பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னன் வரைந்த ஓவியங்கள்



சிகிரியாவில் மொத்தம் 27 ஓவியங்கள் ஆரம்பத்தில் காணப்பட்டன. தகுந்த கவனிப்புகள் இன்றி அவை அழிந்து விட்டன. தற்போது ஏழு ஓவியங்கள் மாத்திரம் காணப்படுகின்றன. ஓவியங்கள் அனைத்தும் காசியப்பன் மன்னனாலேயே வரையப்பட்டுள்ளது.



சுண்ணாம்பு, தேன், கபுக்கல் போன்றவற்றைக் கலந்து பாறையில் பூசிய தளத்திலேயே (ஈரம் காய்வதற்கு முன்) ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் ஈரச் சுதை ஓவிய வகைக்குள் உள்ளடக்கப்படுகிறன. ஓவியங்களுக்கு இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மரத்திலிருந்து கிடைக்கப்படும் பசைவகை (மரத்திலிருந்து பசை வடியும் போது ஒரு நிறமாகவும் சற்று நேரம் செல்ல வேறு நிறமாகவும் சில நாட்கள் கழிய கறுப்பு நிறமாகவும் மாறும் தன்மை கொண்டது. இந்த நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.), பரப்பட்டைச் சாயம் என்பனவாகும்.



கண்ணாடிச்சுவர் ( தற்போது மங்கலாகக் காட்சி தருகிகிறது) தேன், கபுக்கல் கொண்டு ஓவியம் வரைவதற்கு தயார் செய்யப்பட்ட பகுதியாகும் இது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் ஓவியங்கள் வரையப்படவில்லை.



பாதுகாப்பா? கலைத்துவமா?


காசியப்பன் சிரியாவில் பாதுகாப்பானதும், கலைத்துவமானதுமான கோட்டையை அமைத்து, அனுராதபுரத்திலிருந்து தலைநகரை இங்கு மாற்றிக் கொண்டான் என வரலாறு கூறுகின்றது. 600 அடி உயரமான குன்றின் மீது இவன் அரண்மனயை அமைத்தான். படிக்கட்டுகள் மூலம் மலையின் நடுப்பகுதிக்கு போக முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப்பக்கத்திலுள்ள மேடைக்கு போக முடியும். இம் மேடையிலிலுந்து படிக்கட்டுகள் மண்ணினால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிங்கத்தின் கடைவாய்க்கு ஊடே உயர்ந்து செல்கின்றன. குன்றின் உச்சியில் அரண்மனை அத்திவாரத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. இது தேவ அரசர்களின் அரண்மனைக்குச் சொல்லப்பட்ட விதிகள் அடங்கிய அமைப்பையும் கொண்டுள்ளது. இயற்கையான மூன்று ஊற்றுகள், பூங்கா, மன்னன் மகாராணி குளிக்கும் தொட்டி போன்றவை இன்றும் சிதைவுகளுடன் காணப்படுகிறன. மேற்குப்புற பாறைச்சுவரில் சிகிரியா ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.



குன்றின் கிழக்கும் மேற்கும் மதில்களாலும் அகழிகளாலும் அரண் செய்யப்பட்டிருக்கின்றன. மதிலின் சில பகுதிகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. இம் மதிலின் சில பகுதிகள் 30 அடி உயரமுடையன. அகழி 14 அடி ஆழமும் 82 அடி அகலமும் கொண்டது. பாதுகாப்புக்காக நிறுவப்பட்டது என நம்பப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட இலட்சியம் அல்லது கலைநோக்குக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாகவே கருதப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு அமைப்பினால் (யுனெஸ்கோ) கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய இடமாக 1982 இல் சீயகிரி என்ற சிகிரியா அறிவிக்கப்பட்டுள்ளது.



மறைக்கப்படும் மன்னனின் வரலாறு



சிங்கள வரலாற்றுக் குறிப்புகளில் காசியப்பன் மன்னனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கவில்லை. இவனது பாவச்செயல் பற்றியே (தந்தையைக் கொன்றமை) மிகுதியாகக் கூறப்படுகிறது. மாகாவிகாரைப் பிக்குகள் இவன் வழங்கிய கொடைகளை ஏற்க மறுத்ததாக சூளவம்சம் கூறுகின்றது. குறிப்பாக காசியப்பனுக்கு வரலாற்று முக்கியத்துவம் கொடுத்த சிகிரியா பற்றி முழு விபரங்களையும் அறிய முடியாமல் ஊகங்களையும் மனம் போன போக்கில் கூறப்படும் கருத்துக்களையும் கேட்கும் நிலையில் இருக்கின்றோம்.



அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த தாதுசேனனுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் காசியப்பனின் தாய் தாழ்ந்த சாதி என்பதால் சிம்மாசனத்துக்கு அருகதையற்றவனானான். முகலன் பட்டத்தரசியின் மைந்தன்; சிம்மாசனத்துக்கு உரியவன். மூன்றாவது குழந்தை சேனாதிபதியை மணந்து கொண்டாள். மகளை மாமியார் கொடுமைப்படுத்தியதால் அப்பெண்ணை தாதுசேனன் எரித்துக் கொன்றுவிட்டான். இதனால் சேனாதிபதி தாதுசேனனுக்கு விரோதியானான். சிம்மாசனத்தைக் கைப்பற்ற சமயம் பார்த்துக்கொண்டிருந்த காசியப்பனுடன் சேர்ந்து தாதுசேனனை எதிர்த்தான். தந்தையைச் சிறையில் தள்ளி, சிம்மாசனத்தைக் கைப்பற்றியதுடன் தந்தையையும் கொன்றான். தம்பி முகலனையும் ஒழித்துவிட முயல, அவன் இந்தியாவுக்கு தப்பி ஓடினான்.



காசியப்பன் அனுராதபுரத்திலிருந்து சிகிரியாவுக்கு தலைநகரை மாற்றிக் கொண்டமையானது, முகலன் தென்இந்தியாவிலிருந்து பெரும்படையோடு வந்து தன்னை எதிர்ப்பான் என அஞ்சியே இந்த பாதுகாப்பான இடத்தைத் தெரிவு செய்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அனுராதபுர மக்களுக்குப் பயந்து சிகிரியாவுக்கு சரண்புகுந்ததாக வேறு சிலர் கருதுகின்றார்கள். சிகிரியாக் கோட்டையை அமைக்க ஐந்து ஆண்டுகள் கழிந்தன. மக்களுக்குப் பயந்த அரசன் தற்காலிகமாக ஒதுக்கிடம் தேடுவானேயன்றி இவ்வளவு நீண்ட காலத்தில் அமைக்கப்பட வேண்டிய ஒரு இடத்தை தெரிவுசெய்தான் என்பதும் பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது.


காசியப்பன் தன்னைக் கடவுளாகக் கருதினான் என்றும் சிலர் கருதுகின்றார்கள். அக்காலத்து தேவராசர் உயர்ந்த மலைகளில் அமைக்கப்பட்ட விசேட அரண்மனைகளில் வாழ்ந்தார்கள். இக்காரணத்தால் காசியப்பன் சிகிரியாவைத் தலைநகராக்கினான் என சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றார்கள் 

செவ்வாய், 15 மே, 2012

யாபஹுவ


  

களனி விகாரை

பொலநறுவை இலங்காதிலக விகாரை

மாளிகாவில புத்தர் சிலை


மாளிகாவில புத்தர் சிலை இலங்கையின் புத்தள எனும் இடத்தில் காணப்படுகிறது .புத்தள மொனராகல மாவட்டத்தில் உள்ளது.அவுக்கான புத்தர் சிலையை ஒத்த  இச்சிலை நின்ற நிலையில் காணப்படுகிறது. அக்கபோதி என்ற மன்னனால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இச்சிலை கி. பி 6 - 8 ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படுகிறது. 



தம்புள்ள ரங்கிரி விகாரை

தம்புள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்த்துள்ளது. இங்கு 500 அடி உயரமான குன்றில் காணப்படுவதே இக்குகை விகாரையாகும்.இங்கு ௫ குகைப் பிரிவுகள் உள்ளன. இங்குள்ள ஓவியங்களை அனுராதபுரக்காலம்,பொலநருவைக்காலம், கண்டிக்காலம் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இலங்கையின் கூரைச்சித்திரத்திட்கு பெயர் பெற்ற இடம் இதுவாகும். மாத்தளையை சேர்ந்த நாளாகம பரம்பரையினர் இங்குள்ள ஓவியங்களை வரைந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகர தோரணத்தில் யானையின் வாய்க்கு பதிலாக சிங்கத்தின் வாய் காணப் படுகிறது. ,  

சாரநாத்


 இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம். 
சாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த எச்சம் உள்ளது. அதுவே பத்தாள் உயரத்தில் செங்கல்லால் ஆன விசித்திரமான கட்டிடம்போல சாலையோரம் எழுந்து நின்றது. அருகே  சில இருந்தன.  காலத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி அது.


சாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே  — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கி

னார். கயாவுக்குச் சென்று போதியின் அடியில் அமர்ந்து தவம்செய்து ஞானம் பெற்று புத்தராக ஆனபின்னர்  அவர் திரும்பி வந்தார். சாரநாத் வந்து அங்கிருந்த சமணர்களை தன் ஞானத்தால் வென்று பௌத்தர்களாக ஆக்கினார். கொண்டணா,வேபா,பத்தியர், மகாநாமர், அஸாஜி
ஆகியோர் முதல் சீடர்கள்.  ஆஷாட மாசம் முழுநிலவுநாளில் புத்தர் வந்தார் என்று ஐதீகம்.
அந்த வெற்றிதான் பௌத்த மதத்தின் முதல் பெரும் நிகழ்வு. சாரநாத் என்ற பெரும் கல்விமையம் பௌத்த ஞானத்துக்கு வந்தபோது அங்கிருந்து நான்குபக்கமும் புத்த பிட்சுக்கள் கிளம்பிச்சென்று கீழை உலகையே பௌத்தமயமாக்கினார்கள். சாரநாத் அதன்பின் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்த ஞானத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது.  அசோகர் காலம் முதல் அது ஒரு பல்கலைகழகமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ‘மிருகதயா நகர்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. காரணம் இங்கே மான்கள் பேணப்பட்டிருக்கின்றன. இசிபட்னா அல்லது ரிஷிபட்டினம் என்றும் பெயர் உண்டு.


புத்தரின் வெற்றியை நினைவுகூரும்வகையில் அமைக்கப்பட்டது அங்குள்ள ஸ்தூபி.  அசோகர் கால ஸ்தூபியை உள்ளடக்கி குப்தர் காலத்தில் அடுத்த ஸ்தூபி அமைக்கபப்ட்டது. புத்தர் தன் முதல் சீடர்களை அடைந்த இடமாதலாலும் தன் ஞானத்தை விளக்கிப் பேருரை ஆற்றிய இடம் என்பதனாலும் இங்குதான் பௌத்தமதம் பிறவிகொண்டது என்று நம்பப்படுகிறது. இதை தர்ம சக்கர பிரவர்த்தனம் — அறவாழிச் செயல் தொடக்கம்– என்று பௌத்த மெய்ஞான மரபு சொல்கிறது. இடக்கையால் சின் முத்திரை [தர்ம சக்கரத்தின் சின்னம்] காட்டி வலக்கையால் அதைச் சுட்டிக்காட்டி புத்தர் அமர்ந்திருக்கும் காட்சி இதைச் . 36  கொண்ட தர்ம சக்கரம் பௌத்த மெய்ஞானத்தின் குறியீடு.
சாரநாத் இன்று பெரும்பாலும் இடிபாடுகளின் பரப்பு. தொடர்ச்சியான அகழ்வாய்வுகளும் பராமரிப்புகளும் இங்கே நடந்து வருகின்றன. ஆகவே அழகிய புல்வெளி நடுவே தொல் எச்சங்கள் சிறப்பாக பேணப்பட்டிருக்கின்றன. சாரநாத் பல்கலையில் வாழ்ந்த பௌத்த ஞானிகளின் உடல்கள் மேல் எழுப்பப்பட்ட சிறிய ஸ்தூபிகளின் சுட்ட செங்கல்லால் ஆன அடித்தளங்கள் வரிசையாக நிறைந்திருக்கின்றன. பெரிய விஹாரங்களின்  செங்கல் அடித்தளங்கள் வெயிலில் சிவந்து விரிந்து கிடந்தன. உண்மையில் இவை பிட்சுக்களின் உடல்கள் அடக்கம்செய்யபப்ட்ட இடங்களா என்பது ஐயத்துக்குரியது. காரணம் எங்கும் எலும்புகள் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. முன்னோடி ஆய்வாளர்களான அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களின் ஊகம் மட்டுமே அது.
சாரநாத் ஸ்தூபி இப்போது ஸ்தூபி வடிவில் இல்லை. அதன் வட்டமான மாபெரும் கருங்கல் அடித்தளம்  மட்டும் முழுமையாக உள்ளது. அதில் சிறிய அளவில் அலங்கார வேலைப்பாடுகளும் புத்தர் சிலைகளும் உள்ளன. அதன் மேலே  இருந்த ஸ்தூபி செங்கல்லால் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டு அதன்மேல் சுதைப்பூச்சு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். இப்போது உடைந்த செங்கல் கட்டுமானத்தின் எஞ்சிய வடிவமற்ற அமைப்பு மட்டும்  பத்தாள் உயரத்துக்கு எழுந்து நிற்கிறது.
150 அடி உயரமுள்ள சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இங்கே விரிவான தொல்லியலாய்வுகளைச் செய்திருக்கிறார். ஸ்தூபிக்குள் மேலே ஒரு ஓட்டை போட்டு உள்ளே இறங்கி  நூறு அடிவரை உள்ளே சென்று ஆராய்ந்திருக்கிறார். பச்சை சலவைக்கல்லால் ஆன ஒரு பெட்டி கிடைத்திருக்கிறது. அதில் வழிபாட்டுக்குரிய புத்தர் சிலைகளும் பிராமி மொழியில் அமைந்த சில குறிப்புகள் கொண்ட சிலைகளும் கிடைத்திருக்கின்றன. எலும்புகள் ஏதும் இல்லை. உள்ளே அசோகர் காலத்து ஸ்தூபி இருக்கிறதை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தாராம்.
டெல்லி சுல்தான்களின் காலத்தில் சாரநாத் அழிக்கப்பட்டது. நெடுநாட்கள் இடிபாட்டுகள் காட்டுக்குள் கிடந்தன. பின்னர் அவ்விடிபாடுகளை உள்ளூர் ஆட்கள் தரமான செங்கல்லுக்காக நெடுநாள் கொண்டு சென்றிருக்கிறார்கள். 1794ல் காசி மன்னர் செட் சிங்கின் அமைச்சரான ஜெகத் சிங் என்பவர் சாரநாத் ஸ்தூபியை மேலிருந்து இடித்து செங்கல் எடுத்து கொண்டுசென்றார்.  சாரநாத்தின் கணிசமான பகுதி இவ்வாறு இல்லாமலானது.


சாரநாத் இன்று வெறும் செங்கல் மிச்சங்கள் மட்டுமே. ஆனாலும் வரலாற்றை அறிந்த ஒருவருக்கு அது அளிக்கும் மன எழுச்சி அற்புதமானது. மானுட ஞானத்தின் ஒரு மகத்தான கொந்தளிப்பின் செங்கல் தடையம் அது. நம்பிக்கைகளில் இருந்து நுண் ஞானம் நோக்கி மானுடப்பிரக்ஞ்ஞை பாய்ந்துசென்றது பௌத்தம் வழியாகவே. அதன் பின் உலகில் உருவான எல்லா மெய்ஞானமும் பௌத்தத்தில் இருந்து வேர்  பெற்றுக் கொண்டவையே.
அசோகர் சாரநாத்தில் எழுப்பிய வெற்றித்தூண்  இடிந்து பல துண்டுகளாக கிடந்திருக்கிறது. அதை ஒரு சிறு மண்டபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  அதில் பிராமி லிபிகளில் அசோகரின் செய்தி இருக்கிறது. அந்த தூணின் உச்சியில்தான் நமது தேசிய அடையாளமான நான்குசிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம் இருந்தது.
சாரநாத் அருங்காட்சியகத்தில் அசோகரின் அந்தச் சின்னம் அதிக சேதம் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம் அது. முகப்பிலேயே நல்ல ஒளியமைப்பில் அச்சின்னம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மென்மையான தவிட்டு நிறம் கொண்ட ஒருவகை சலவைக்கல்லில் மழமழவென்று செதுக்கப்பட்ட நான்கு சிங்கங்கள். மேலே பீடம். கீழே 36 ஆரங்களுடன் தர்ம சக்கரம் [நமது தேசிய சின்னம் 24 ஆரம் கொண்டது]
தர்ம சக்கரம் அறத்தின் சுழற்சியை, பௌத்த்த ஞானம் உருளத்தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. நான்கு சிங்கங்களும் புத்தரையே குறிக்கின்றன. புத்தர் சாக்கிய சிங்கம் என்று சொல்வது பௌத்த மரபு. நான்கு பக்கமும் சாக்கியசிங்கம் கிளம்புவதையே அச்சிலை குறிப்பிடுகிறது. நம் தேசியக்குறியீடாக அமைவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட ஒரு மகத்தான சிலை அது. அதை தேர்வுசெய்ததில் நேருவுக்கு பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் மதவெறியால் பீடிக்கப்படாத நேரு நம் தேசத்தை வழிநடத்தியது நமது நல்லுழ் என்றே சொல்லவேண்டும்.
சாரநாத் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒரு சேகரிப்பு. இங்குள்ள அரிய புத்தர் சிலைகளை விரிவாகவே ஆராய வேண்டும். புத்தர் அவலோகிதர், மைத்ரேயர் போன்ற அபூர்வ தோற்றங்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். தாராதேவி [பிஞ்ஞாதாரா] யின் பல சிலைகள் நுட்பமான அழகுகொண்டவை.