செவ்வாய், 15 மே, 2012
சாரநாத்
Posted on 8:28 AM by piragasart
இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம்.
சாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த எச்சம் உள்ளது. அதுவே பத்தாள் உயரத்தில் செங்கல்லால் ஆன விசித்திரமான கட்டிடம்போல சாலையோரம் எழுந்து நின்றது. அருகே சில இருந்தன. காலத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி அது.
சாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கி
சாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கி
ஆகியோர் முதல் சீடர்கள். ஆஷாட மாசம் முழுநிலவுநாளில் புத்தர் வந்தார் என்று ஐதீகம்.
அந்த வெற்றிதான் பௌத்த மதத்தின் முதல் பெரும் நிகழ்வு. சாரநாத் என்ற பெரும் கல்விமையம் பௌத்த ஞானத்துக்கு வந்தபோது அங்கிருந்து நான்குபக்கமும் புத்த பிட்சுக்கள் கிளம்பிச்சென்று கீழை உலகையே பௌத்தமயமாக்கினார்கள். சாரநாத் அதன்பின் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்த ஞானத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. அசோகர் காலம் முதல் அது ஒரு பல்கலைகழகமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ‘மிருகதயா நகர்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. காரணம் இங்கே மான்கள் பேணப்பட்டிருக்கின்றன. இசிபட்னா அல்லது ரிஷிபட்டினம் என்றும் பெயர் உண்டு.
புத்தரின் வெற்றியை நினைவுகூரும்வகையில் அமைக்கப்பட்டது அங்குள்ள ஸ்தூபி. அசோகர் கால ஸ்தூபியை உள்ளடக்கி குப்தர் காலத்தில் அடுத்த ஸ்தூபி அமைக்கபப்ட்டது. புத்தர் தன் முதல் சீடர்களை அடைந்த இடமாதலாலும் தன் ஞானத்தை விளக்கிப் பேருரை ஆற்றிய இடம் என்பதனாலும் இங்குதான் பௌத்தமதம் பிறவிகொண்டது என்று நம்பப்படுகிறது. இதை தர்ம சக்கர பிரவர்த்தனம் — அறவாழிச் செயல் தொடக்கம்– என்று பௌத்த மெய்ஞான மரபு சொல்கிறது. இடக்கையால் சின் முத்திரை [தர்ம சக்கரத்தின் சின்னம்] காட்டி வலக்கையால் அதைச் சுட்டிக்காட்டி புத்தர் அமர்ந்திருக்கும் காட்சி இதைச் . 36 கொண்ட தர்ம சக்கரம் பௌத்த மெய்ஞானத்தின் குறியீடு.
சாரநாத் இன்று பெரும்பாலும் இடிபாடுகளின் பரப்பு. தொடர்ச்சியான அகழ்வாய்வுகளும் பராமரிப்புகளும் இங்கே நடந்து வருகின்றன. ஆகவே அழகிய புல்வெளி நடுவே தொல் எச்சங்கள் சிறப்பாக பேணப்பட்டிருக்கின்றன. சாரநாத் பல்கலையில் வாழ்ந்த பௌத்த ஞானிகளின் உடல்கள் மேல் எழுப்பப்பட்ட சிறிய ஸ்தூபிகளின் சுட்ட செங்கல்லால் ஆன அடித்தளங்கள் வரிசையாக நிறைந்திருக்கின்றன. பெரிய விஹாரங்களின் செங்கல் அடித்தளங்கள் வெயிலில் சிவந்து விரிந்து கிடந்தன. உண்மையில் இவை பிட்சுக்களின் உடல்கள் அடக்கம்செய்யபப்ட்ட இடங்களா என்பது ஐயத்துக்குரியது. காரணம் எங்கும் எலும்புகள் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. முன்னோடி ஆய்வாளர்களான அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களின் ஊகம் மட்டுமே அது.
சாரநாத் ஸ்தூபி இப்போது ஸ்தூபி வடிவில் இல்லை. அதன் வட்டமான மாபெரும் கருங்கல் அடித்தளம் மட்டும் முழுமையாக உள்ளது. அதில் சிறிய அளவில் அலங்கார வேலைப்பாடுகளும் புத்தர் சிலைகளும் உள்ளன. அதன் மேலே இருந்த ஸ்தூபி செங்கல்லால் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டு அதன்மேல் சுதைப்பூச்சு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். இப்போது உடைந்த செங்கல் கட்டுமானத்தின் எஞ்சிய வடிவமற்ற அமைப்பு மட்டும் பத்தாள் உயரத்துக்கு எழுந்து நிற்கிறது.
150 அடி உயரமுள்ள சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இங்கே விரிவான தொல்லியலாய்வுகளைச் செய்திருக்கிறார். ஸ்தூபிக்குள் மேலே ஒரு ஓட்டை போட்டு உள்ளே இறங்கி நூறு அடிவரை உள்ளே சென்று ஆராய்ந்திருக்கிறார். பச்சை சலவைக்கல்லால் ஆன ஒரு பெட்டி கிடைத்திருக்கிறது. அதில் வழிபாட்டுக்குரிய புத்தர் சிலைகளும் பிராமி மொழியில் அமைந்த சில குறிப்புகள் கொண்ட சிலைகளும் கிடைத்திருக்கின்றன. எலும்புகள் ஏதும் இல்லை. உள்ளே அசோகர் காலத்து ஸ்தூபி இருக்கிறதை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தாராம்.
டெல்லி சுல்தான்களின் காலத்தில் சாரநாத் அழிக்கப்பட்டது. நெடுநாட்கள் இடிபாட்டுகள் காட்டுக்குள் கிடந்தன. பின்னர் அவ்விடிபாடுகளை உள்ளூர் ஆட்கள் தரமான செங்கல்லுக்காக நெடுநாள் கொண்டு சென்றிருக்கிறார்கள். 1794ல் காசி மன்னர் செட் சிங்கின் அமைச்சரான ஜெகத் சிங் என்பவர் சாரநாத் ஸ்தூபியை மேலிருந்து இடித்து செங்கல் எடுத்து கொண்டுசென்றார். சாரநாத்தின் கணிசமான பகுதி இவ்வாறு இல்லாமலானது.
சாரநாத் இன்று வெறும் செங்கல் மிச்சங்கள் மட்டுமே. ஆனாலும் வரலாற்றை அறிந்த ஒருவருக்கு அது அளிக்கும் மன எழுச்சி அற்புதமானது. மானுட ஞானத்தின் ஒரு மகத்தான கொந்தளிப்பின் செங்கல் தடையம் அது. நம்பிக்கைகளில் இருந்து நுண் ஞானம் நோக்கி மானுடப்பிரக்ஞ்ஞை பாய்ந்துசென்றது பௌத்தம் வழியாகவே. அதன் பின் உலகில் உருவான எல்லா மெய்ஞானமும் பௌத்தத்தில் இருந்து வேர் பெற்றுக் கொண்டவையே.
அசோகர் சாரநாத்தில் எழுப்பிய வெற்றித்தூண் இடிந்து பல துண்டுகளாக கிடந்திருக்கிறது. அதை ஒரு சிறு மண்டபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் பிராமி லிபிகளில் அசோகரின் செய்தி இருக்கிறது. அந்த தூணின் உச்சியில்தான் நமது தேசிய அடையாளமான நான்குசிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம் இருந்தது.
சாரநாத் அருங்காட்சியகத்தில் அசோகரின் அந்தச் சின்னம் அதிக சேதம் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம் அது. முகப்பிலேயே நல்ல ஒளியமைப்பில் அச்சின்னம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மென்மையான தவிட்டு நிறம் கொண்ட ஒருவகை சலவைக்கல்லில் மழமழவென்று செதுக்கப்பட்ட நான்கு சிங்கங்கள். மேலே பீடம். கீழே 36 ஆரங்களுடன் தர்ம சக்கரம் [நமது தேசிய சின்னம் 24 ஆரம் கொண்டது]
தர்ம சக்கரம் அறத்தின் சுழற்சியை, பௌத்த்த ஞானம் உருளத்தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. நான்கு சிங்கங்களும் புத்தரையே குறிக்கின்றன. புத்தர் சாக்கிய சிங்கம் என்று சொல்வது பௌத்த மரபு. நான்கு பக்கமும் சாக்கியசிங்கம் கிளம்புவதையே அச்சிலை குறிப்பிடுகிறது. நம் தேசியக்குறியீடாக அமைவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட ஒரு மகத்தான சிலை அது. அதை தேர்வுசெய்ததில் நேருவுக்கு பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் மதவெறியால் பீடிக்கப்படாத நேரு நம் தேசத்தை வழிநடத்தியது நமது நல்லுழ் என்றே சொல்லவேண்டும்.
சாரநாத் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒரு சேகரிப்பு. இங்குள்ள அரிய புத்தர் சிலைகளை விரிவாகவே ஆராய வேண்டும். புத்தர் அவலோகிதர், மைத்ரேயர் போன்ற அபூர்வ தோற்றங்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். தாராதேவி [பிஞ்ஞாதாரா] யின் பல சிலைகள் நுட்பமான அழகுகொண்டவை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
No Response to "சாரநாத்"
Leave A Reply