ஞாயிறு, 13 மே, 2012

ருவான்வெலிசாய

Posted on 8:04 AM by piragasart

திருத்தியமைக்கப்பட்டதன் பின்
 

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாதுகோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.    

பண்டைய அனுராதபுரத்தின், சொலொஸ்மஸ்தானங்கள் எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், அட்டமஸ்தானங்கள் எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும்.

பழையதோற்றம்

No Response to "ருவான்வெலிசாய"

Leave A Reply