செவ்வாய், 15 மே, 2012
மாளிகாவில புத்தர் சிலை
மாளிகாவில புத்தர் சிலை இலங்கையின் புத்தள எனும் இடத்தில் காணப்படுகிறது .புத்தள மொனராகல மாவட்டத்தில் உள்ளது.அவுக்கான புத்தர் சிலையை ஒத்த இச்சிலை நின்ற நிலையில் காணப்படுகிறது. அக்கபோதி என்ற மன்னனால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இச்சிலை கி. பி 6 - 8 ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படுகிறது.
Posted on 8:32 AM
தம்புள்ள ரங்கிரி விகாரை
தம்புள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்த்துள்ளது. இங்கு 500 அடி உயரமான குன்றில் காணப்படுவதே இக்குகை விகாரையாகும்.இங்கு ௫ குகைப் பிரிவுகள் உள்ளன. இங்குள்ள ஓவியங்களை அனுராதபுரக்காலம்,பொலநருவைக்காலம், கண்டிக்காலம் என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இலங்கையின் கூரைச்சித்திரத்திட்கு பெயர் பெற்ற இடம் இதுவாகும். மாத்தளையை சேர்ந்த நாளாகம பரம்பரையினர் இங்குள்ள ஓவியங்களை வரைந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகர தோரணத்தில் யானையின் வாய்க்கு பதிலாக சிங்கத்தின் வாய் காணப் படுகிறது. ,
Posted on 8:30 AM
சாரநாத்
இருந்து சாரநாத் பத்து கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. காசியைச் சேர்ந்த ஒரு புறநகர் காட்டுப்பகுதியாக அது இருதிருக்கலாம்.
சாரநாத் செல்லும் பாதையிலேயே ஒரு புராதனமான ஸ்தூபியின் இடிந்த எச்சம் உள்ளது. அதுவே பத்தாள் உயரத்தில் செங்கல்லால் ஆன விசித்திரமான கட்டிடம்போல சாலையோரம் எழுந்து நின்றது. அருகே சில இருந்தன. காலத்தில் கட்டப்பட்ட ஸ்தூபி அது.
சாரநாத் புத்தருக்கு முந்நூறு வருடம் முன்னரே– அதாவது கிமு அறுநூறிலேயே — முக்கியமான ஞான மையமாக இருந்திருக்கிறது. சமணர்களின் தலைமையகம் அது. சமண தீர்த்தங்காரர்களில் மூவர் அங்கே இருந்திருக்கிறார்கள். ஞானம் தேடி அரசும் குடியும் குடும்பமும் துறந்து சித்தார்த்தன் அங்குதான் வந்தார். சமணர்களில் ஒருவராக அமர்ந்து ஊழ்கம் பயின்றார். பின்னர் அவர்களின் அதி உக்கிர தவத்தால் உடல்தான் நலிகிறது மனம் கூடவே நலிவடைகிறது என்று கண்டு அவர்களை விட்டு நீங்கி

ஆகியோர் முதல் சீடர்கள். ஆஷாட மாசம் முழுநிலவுநாளில் புத்தர் வந்தார் என்று ஐதீகம்.
அந்த வெற்றிதான் பௌத்த மதத்தின் முதல் பெரும் நிகழ்வு. சாரநாத் என்ற பெரும் கல்விமையம் பௌத்த ஞானத்துக்கு வந்தபோது அங்கிருந்து நான்குபக்கமும் புத்த பிட்சுக்கள் கிளம்பிச்சென்று கீழை உலகையே பௌத்தமயமாக்கினார்கள். சாரநாத் அதன்பின் ஐந்து நூற்றாண்டுக்காலம் பௌத்த ஞானத்தின் மையமாக விளங்கிவந்திருக்கிறது. அசோகர் காலம் முதல் அது ஒரு பல்கலைகழகமாக வளர்ச்சி பெற்றது. இதற்கு ‘மிருகதயா நகர்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. காரணம் இங்கே மான்கள் பேணப்பட்டிருக்கின்றன. இசிபட்னா அல்லது ரிஷிபட்டினம் என்றும் பெயர் உண்டு.
புத்தரின் வெற்றியை நினைவுகூரும்வகையில் அமைக்கப்பட்டது அங்குள்ள ஸ்தூபி. அசோகர் கால ஸ்தூபியை உள்ளடக்கி குப்தர் காலத்தில் அடுத்த ஸ்தூபி அமைக்கபப்ட்டது. புத்தர் தன் முதல் சீடர்களை அடைந்த இடமாதலாலும் தன் ஞானத்தை விளக்கிப் பேருரை ஆற்றிய இடம் என்பதனாலும் இங்குதான் பௌத்தமதம் பிறவிகொண்டது என்று நம்பப்படுகிறது. இதை தர்ம சக்கர பிரவர்த்தனம் — அறவாழிச் செயல் தொடக்கம்– என்று பௌத்த மெய்ஞான மரபு சொல்கிறது. இடக்கையால் சின் முத்திரை [தர்ம சக்கரத்தின் சின்னம்] காட்டி வலக்கையால் அதைச் சுட்டிக்காட்டி புத்தர் அமர்ந்திருக்கும் காட்சி இதைச் . 36 கொண்ட தர்ம சக்கரம் பௌத்த மெய்ஞானத்தின் குறியீடு.
சாரநாத் இன்று பெரும்பாலும் இடிபாடுகளின் பரப்பு. தொடர்ச்சியான அகழ்வாய்வுகளும் பராமரிப்புகளும் இங்கே நடந்து வருகின்றன. ஆகவே அழகிய புல்வெளி நடுவே தொல் எச்சங்கள் சிறப்பாக பேணப்பட்டிருக்கின்றன. சாரநாத் பல்கலையில் வாழ்ந்த பௌத்த ஞானிகளின் உடல்கள் மேல் எழுப்பப்பட்ட சிறிய ஸ்தூபிகளின் சுட்ட செங்கல்லால் ஆன அடித்தளங்கள் வரிசையாக நிறைந்திருக்கின்றன. பெரிய விஹாரங்களின் செங்கல் அடித்தளங்கள் வெயிலில் சிவந்து விரிந்து கிடந்தன. உண்மையில் இவை பிட்சுக்களின் உடல்கள் அடக்கம்செய்யபப்ட்ட இடங்களா என்பது ஐயத்துக்குரியது. காரணம் எங்கும் எலும்புகள் அகழ்வாய்வுகளில் கிடைக்கவில்லை. முன்னோடி ஆய்வாளர்களான அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் போன்றவர்களின் ஊகம் மட்டுமே அது.
சாரநாத் ஸ்தூபி இப்போது ஸ்தூபி வடிவில் இல்லை. அதன் வட்டமான மாபெரும் கருங்கல் அடித்தளம் மட்டும் முழுமையாக உள்ளது. அதில் சிறிய அளவில் அலங்கார வேலைப்பாடுகளும் புத்தர் சிலைகளும் உள்ளன. அதன் மேலே இருந்த ஸ்தூபி செங்கல்லால் அரைக்கோள வடிவில் கட்டப்பட்டு அதன்மேல் சுதைப்பூச்சு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். இப்போது உடைந்த செங்கல் கட்டுமானத்தின் எஞ்சிய வடிவமற்ற அமைப்பு மட்டும் பத்தாள் உயரத்துக்கு எழுந்து நிற்கிறது.
150 அடி உயரமுள்ள சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இங்கே விரிவான தொல்லியலாய்வுகளைச் செய்திருக்கிறார். ஸ்தூபிக்குள் மேலே ஒரு ஓட்டை போட்டு உள்ளே இறங்கி நூறு அடிவரை உள்ளே சென்று ஆராய்ந்திருக்கிறார். பச்சை சலவைக்கல்லால் ஆன ஒரு பெட்டி கிடைத்திருக்கிறது. அதில் வழிபாட்டுக்குரிய புத்தர் சிலைகளும் பிராமி மொழியில் அமைந்த சில குறிப்புகள் கொண்ட சிலைகளும் கிடைத்திருக்கின்றன. எலும்புகள் ஏதும் இல்லை. உள்ளே அசோகர் காலத்து ஸ்தூபி இருக்கிறதை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தாராம்.
டெல்லி சுல்தான்களின் காலத்தில் சாரநாத் அழிக்கப்பட்டது. நெடுநாட்கள் இடிபாட்டுகள் காட்டுக்குள் கிடந்தன. பின்னர் அவ்விடிபாடுகளை உள்ளூர் ஆட்கள் தரமான செங்கல்லுக்காக நெடுநாள் கொண்டு சென்றிருக்கிறார்கள். 1794ல் காசி மன்னர் செட் சிங்கின் அமைச்சரான ஜெகத் சிங் என்பவர் சாரநாத் ஸ்தூபியை மேலிருந்து இடித்து செங்கல் எடுத்து கொண்டுசென்றார். சாரநாத்தின் கணிசமான பகுதி இவ்வாறு இல்லாமலானது.
சாரநாத் இன்று வெறும் செங்கல் மிச்சங்கள் மட்டுமே. ஆனாலும் வரலாற்றை அறிந்த ஒருவருக்கு அது அளிக்கும் மன எழுச்சி அற்புதமானது. மானுட ஞானத்தின் ஒரு மகத்தான கொந்தளிப்பின் செங்கல் தடையம் அது. நம்பிக்கைகளில் இருந்து நுண் ஞானம் நோக்கி மானுடப்பிரக்ஞ்ஞை பாய்ந்துசென்றது பௌத்தம் வழியாகவே. அதன் பின் உலகில் உருவான எல்லா மெய்ஞானமும் பௌத்தத்தில் இருந்து வேர் பெற்றுக் கொண்டவையே.
அசோகர் சாரநாத்தில் எழுப்பிய வெற்றித்தூண் இடிந்து பல துண்டுகளாக கிடந்திருக்கிறது. அதை ஒரு சிறு மண்டபத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அதில் பிராமி லிபிகளில் அசோகரின் செய்தி இருக்கிறது. அந்த தூணின் உச்சியில்தான் நமது தேசிய அடையாளமான நான்குசிங்கங்களும் சக்கரமும் கொண்ட சின்னம் இருந்தது.
சாரநாத் அருங்காட்சியகத்தில் அசோகரின் அந்தச் சின்னம் அதிக சேதம் இல்லாமல் வைக்கப்பட்டிருக்கிறது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அருங்காட்சியகம் அது. முகப்பிலேயே நல்ல ஒளியமைப்பில் அச்சின்னம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மென்மையான தவிட்டு நிறம் கொண்ட ஒருவகை சலவைக்கல்லில் மழமழவென்று செதுக்கப்பட்ட நான்கு சிங்கங்கள். மேலே பீடம். கீழே 36 ஆரங்களுடன் தர்ம சக்கரம் [நமது தேசிய சின்னம் 24 ஆரம் கொண்டது]
தர்ம சக்கரம் அறத்தின் சுழற்சியை, பௌத்த்த ஞானம் உருளத்தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்கிறது. நான்கு சிங்கங்களும் புத்தரையே குறிக்கின்றன. புத்தர் சாக்கிய சிங்கம் என்று சொல்வது பௌத்த மரபு. நான்கு பக்கமும் சாக்கியசிங்கம் கிளம்புவதையே அச்சிலை குறிப்பிடுகிறது. நம் தேசியக்குறியீடாக அமைவதற்கு முற்றிலும் தகுதி கொண்ட ஒரு மகத்தான சிலை அது. அதை தேர்வுசெய்ததில் நேருவுக்கு பெரும் பங்குண்டு என்பார்கள். அவரது இந்திய தரிசனத்தின் ஆழத்தை அது காட்டுகிறது. ஒரு சிக்கலான காலகட்டத்தில் மதவெறியால் பீடிக்கப்படாத நேரு நம் தேசத்தை வழிநடத்தியது நமது நல்லுழ் என்றே சொல்லவேண்டும்.
சாரநாத் அருங்காட்சியகம் மிக முக்கியமான ஒரு சேகரிப்பு. இங்குள்ள அரிய புத்தர் சிலைகளை விரிவாகவே ஆராய வேண்டும். புத்தர் அவலோகிதர், மைத்ரேயர் போன்ற அபூர்வ தோற்றங்களில் வடிக்கப்பட்டிருக்கிறார். தாராதேவி [பிஞ்ஞாதாரா] யின் பல சிலைகள் நுட்பமான அழகுகொண்டவை.
Posted on 8:28 AM
ஓவியர் ஏ.சீ.ஜீ.எஸ் அமரசெகர
20 ஆம் நூற்றாண்டிற்கரிய இலங்கைச் சித்திரக்கலையின் ஆரம்ப காலத்து சித்திரக் கலைஞராவர் மரபுரீதியான கலையின் முன்னோடியான இவர் 1883 இல் பிறந்தார். இவர் காட்டூன் சித்திரங்களை வரைவதன் மூலம் கலைத்துரைக்கு பிரவேசித்தார். பிரித்தானிய ஆட்சியாளர்களின் ஆதரவுடன் 1891 இல் இலங்கைக் கலா சங்கத்தை ஸ்தாபிப்பதற்கு (ceylon society of Art) முன்னின்று செயற்பட்ட முன்னோடிக் கலைஞர் ஆவர்.
இலங்கை அன்னியர் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து வந்த கலைஞர்களிடம் இருந்து பெற்ற கலைத்தாக்கத்தை இலங்கைக் கலாசங்கத்து கலைஞர்களின் ஆக்கங்களில் காணக் கூடியதாக இருந்தது. இவர் சித்திரப் படைப்புக்களில் ஐரோப்பிய மரபு ரீதியான கலைப்பாணியான,இயற்கை வாதம், தாத்வீக வாதம், றோமன்டிய் வாதம் போன்ற கலைப் பண்புகளைக் காணலாம்.
உயிர் ஓவியம் , யதார்த்த வாதம், தரைக்காடசி ஆகியவர்ரை வரைவதில் திறமை பெற்ற இவர் சித்திரம் வரைவதற்கு நீர்வர்ணம், எண்ணெய் வர்ணம் ஆகிய இரு வகைகளையும் பயன்படுத்தி உள்ளார். ஒளி நிழல் தொடர்பில் இவரிடம் காணப்பட்ட மரபுரீதியான “சியாறஸ்கியுறோ” கோட்பாடுகளை இவரது ஆக்கங்களில் காணலாம். (சியாற chiare- ஒளி,ஸ்கியுறோ scare - நிழல் என்னம் சொற்களின் இணைப்பால் “சியாறஸ்கியுறோ” என்னும் சொல் உருவாகியுள்ளது)
இவரின் பிரசித்தி பெற்ற ஓவியங்கள்
1. தச்சனின் வீடு
2. பேய் ஓட்டுபவரின் மகள்
3. பூனைக்குட்டி
4. றீட் மாவத்தை(நீர்வர்ணம்)
5. அரசியல் தலைவர்களின் மார்பளவான பிரதிமைச் சித்திரம்.
6. பேய் ஓட்டுபனின் மகள்
பேய் ஓட்டுபவனின் மகள் - 1936
இவ்ஓவியம் கன்வஸ் துணியில் எண்ணெய் வர்ணத்தால் வரைந்துள்ளார். றோமண்டிக் வாதப் பாணியின் இயல்புக்கு ஏற்ப புதுமைக்கு ஏற்ப மாந்திரீக கருத்துடன் கூடியதும் மனக் கற்பனையுடன் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
இவ்ஓவியத்தின் ஒளி நிழல் பிரயோகத்தை இவர் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார். பேய் ஓட்டுபவனின் மகள் என்னும் சித்திரம் வர்ணத் தூரநோக்கு வெளிப்படும் வகையில் முன்னணி,மத்திய அணி, பின்னணி என ஒரே தளத்தில் கருத்துடன் உருவமைக்கப்பட்டு உள்ளது. இவ் ஓவியம் பேய் ஒட்டியின் மகளுக்கு பலி சாந்தி கர்மத்திற்கான உடையை உடுத்தியதால் தீடீர் என்று ஏற்பட்ட பயத்தை சித்தரிப்பதாக காட்டப்பட்டுள்ளது. சித்திரத்தில் காணப்படும் நெருப்புச் சுடரும், அவளது பய உணர்வையும் ஒன்றாக வெளிப்படும் வகையில் வரையப்பட்டுள்ளது. முகமூடியும் மிகப் பெரிய நிழலும் முழு ஆக்கத்தின் சிறப்பை காட்டுகின்னது.

Posted on 8:17 AM
ஞாயிறு, 13 மே, 2012
ருவான்வெலிசாய
திருத்தியமைக்கப்பட்டதன் பின்
நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாதுகோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
பண்டைய அனுராதபுரத்தின், சொலொஸ்மஸ்தானங்கள் எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், அட்டமஸ்தானங்கள் எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும்.

பழையதோற்றம்
Posted on 8:04 AM
அபயகிரி விகாரை
கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகள் தொடக்கம், கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலை நகரமாக இருந்த அனுராதபுரம், ஒரு அரசியல் தலைமை இடமாக விளங்கியது மட்டுமன்றிப் பல பௌத்த சமய வணக்கத் தலங்களையும், பௌத்த பிக்குகளுக்கான மடங்களையும் கொண்டிருந்தது. பௌத்த மக்களின் முக்கிய யாத்திரைக்கு உரிய இடமாக விளங்கிய அனுராதபுரம் நகரத்தின் வடக்குப் பகுதியில், உயர்ந்த மதில்களால் சூழப்பட்டு, நீராடுவதற்கான குளங்களையும், அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய கட்டிடங்களையும், கொண்ட அபயகிரி விகாரை அமைந்திருந்தது. அனுராதபுரத்திலிருந்த, அவ்வாறான 17 சமய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய அபயகிரி விகாரை, அவற்றுள் முக்கியமான ஐந்து விகாரைகளுள் மிகப் பெரியது ஆகும்.
அபயகிரி விகாரை, பௌத்த துறவிமடக் கட்டிடத் தொகுதியாக விளங்கியது மட்டும் அன்றிப் பௌத்த துறவிகளின் சங்கமாகவும் தொழிற்பட்டது. இது, இலங்கையின், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை முதலானவை தொடர்பான தகவல்களைப் பதிந்து பாதுகாத்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இது, கி.பி முதலாம் நூற்றாண்டில், உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த, பௌத்த அறிஞர்களைக் கவரும் அனைத்துலக நிறுவனம் ஆனது. கிளை நிறுவனங்களூடாக நடைபெற்ற இதன் செயற்பாடுகளின் தாக்கத்தை உலகின் பல பகுதிகளிலும் காண முடியும்.
Posted on 8:02 AM
பொலன்னறுவை கல்விகாரை
பொலநறுவையில் காணப்படுகிறது. அமர்ந்த நிலை, நின்ற நிலை, துயில் நிலை ஆகிய மூன்று நிலைகளில் புத்தர் சிலைகள் காணப்படும் இலங்கையின் சிறப்பு மிக்க 4புத்தர் சிலைமனை இதுவாகும். பராக்கிரமபாகு மன்னனால் 12 ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் இதன் முன்னைய பெயர் உத்தராராமய என்பதாகும். நாலமான கற்பாறை ஒன்றைக் குடைந்து இச்சிசிலைகளுக்கும் லை மனை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நான்கு பிரதான நான்கு தனித்தனி விகாரைகள் அமைக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
Posted on 7:51 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)